உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரிஆண்டு விளையாட்டு விழா

யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரிஆண்டு விளையாட்டு விழா

கோவை;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியின் 15ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களை ஒயிட் மேவரிக், பிளாக் பேந்தர்ஸ், ரெட் டைட்டன்ஸ் மற்றும் புளூ பிரேவ்ஸ் என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் மாணவர்களுக்கு கால்பந்து, வாலிபால், இறகுப்பந்து, கபடி, செஸ் மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகளும் மாணவியருக்கு கோ--கோ, இறகுப்பந்து வாலிபால், செஸ், த்ரோபால் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.மேலும், விளையாட்டு விழாவில் 100மீ., 200மீ., 400மீ., 800மீ., வட்டு எறிதல், குண்டு எறிதல் போன்ற தடகள போட்டிகளுக்கான இறுதிச்சுற்றுகள் நடத்தப்பட்டன.நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஒயிட் மேவரிக்ஸ் மற்றும் பிளாக் பேந்தர்ஸ் இரு அணிகளும் தலா 55 புள்ளிகள் பெற்றதால் இரு அணிகளுக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக அபினேஷ், சூர்யா, சிறந்த விளையாட்டு வீராங்கனையாக சஞ்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வி கல்லுாரி முதல்வர் ஜெயபால் பரிசு வழங்கினார். யுனைடெட் கல்லுாரியின் நிறுவனர் சண்முகம், முதல்வர் ராதாகிருஷ்ணன் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை