| ADDED : ஜூலை 02, 2024 02:10 AM
பொள்ளாச்சி;''டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வினியோகிக்கப்படும்,'' என, இந்திய இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் ைஹதராபாத் இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவனம் சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் ரத்த வங்கி பிரிவிற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ைஹதராபாத் இந்தியன் இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன, நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமார், உபகரண பொருட்களை, பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, அரசு மருத்துவமனை டாக்டர் ராஜா ஆகியோரிடம் வழங்கினார்.நிர்வாக இயக்குனர் கூறியதாவது: ைஹதராபாத்தில், செயல்படும் எங்களது நிறுவனம் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் நோய்களை, 'வருமுன் காப்போம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயார் செய்து, இந்தியா மட்டுமல்லாது, 60 வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.தற்போது டெங்கு, சிக்குன் - குன்யா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான முதல் கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெங்கு தடுப்பூசி மருந்துகள் வினிநோயகம் செய்யப்படும். மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சி பணியில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.