உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி வெள்ளியில் ஐஸ்வரியம் பெருக வரலட்சுமி பூஜை

ஆடி வெள்ளியில் ஐஸ்வரியம் பெருக வரலட்சுமி பூஜை

- நிருபர் குழு -ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கி வழிபாடு செய்து வந்தனர்.சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு, 15 ஆயிரம் வளையல்கள் கொண்டு அலங்கார வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் முன்புள்ள பீடத்தில், உப்பை கொட்டி நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஒன்பது வகையான அபிேஷகம், மலர் மாலைகளால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், வரலட்சுமி விரத பூஜை நடந்தது.நெகமம், செட்டியக்காபாளையம் மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடந்தது. அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் பூஜை செய்யப்பட்டது.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பால், சந்தனம், பன்னீர், குங்குமம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பச்சமலை தெற்கு டிவிஷன் காளியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் கணபதி ேஹாமமும், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

உடுமலை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, உடுமலையில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்கள், விளக்கேற்றியும், தாலி கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல்கள் என மங்கலப் பொருட்களையும் வழங்கினர். வீடுகளிலும் வரலட்சுமி பூஜை செய்து மகாலட்சுமியை அழைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை