உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலை பயணம் அனுமதி இன்றுடன் நிறைவு

வெள்ளியங்கிரி மலை பயணம் அனுமதி இன்றுடன் நிறைவு

தொண்டாமுத்துார்;பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பக்தர்களுக்கான அனுமதி இன்றுடன் நிறைவடைவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், 'தென் கையிலாயம்' எனப்படும் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு, கடந்த, பிப்., 12 முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.இதனால், கடந்த, நான்கு மாதங்களாக, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்தனர். இந்நிலையில், இந்தாண்டு மலை ஏறுவதற்கான அனுமதி, இன்றுடன் (மே 31ம் தேதி) நிறைவடைவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறுகையில், ''வெள்ளியங்கிரி மலை ஏற, கடந்த, பிப்., 12 முதல், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை, சுமார், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையேறி வந்துள்ளனர். இந்தாண்டிற்கான அனுமதி, மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் மலையேற அனுமதி இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ