உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

விஜய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்;பச்சாபாளையம், விஜயகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அன்னுார் அருகே பெரியூர் பச்சாபாளையம், பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில், புதிதாக விஜயகணபதி சுவாமிக்கு மேடை அமைக்கப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து, வர்ணம் பூசப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு முதற்கால வேள்வி பூஜை, விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல், மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜையும், நாடி சந்தானமும் நடந்தது. காலை 6:30 மணிக்கு விஜய கணபதிக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கோ பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை