உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனாளிகள் தேர்வுக்கு கிராம சபை கூட்டம் 

பயனாளிகள் தேர்வுக்கு கிராம சபை கூட்டம் 

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளிலும் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் வீடுகள் பராமரிப்பு குறித்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மொத்தமாக, 2,336 ஆண்கள் மற்றும் 2,796 பெண்கள் என மொத்தம் 5,132 நபர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பராமரிப்பு பயனாளர்கள் தேர்வு குறித்து ஒரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. இதே போன்று, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை