உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 22ம் தேதி கிராம சபை கூட்டம்

வரும் 22ம் தேதி கிராம சபை கூட்டம்

அன்னுார்: அன்னுார் ஒன்றியத்தில் வரும் 22ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கணக்கெடுப்பில் வராதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 22ம் தேதி காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே அனைத்து பொது மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றி போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளிலும் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் ஏழு ஊராட்சிகளிலும், வருகிற 22 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை