உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு விஷன் 2030 நம்பிக்கை தருகிறார் அ.தி.மு.க., வேட்பாளர்

கோவையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு விஷன் 2030 நம்பிக்கை தருகிறார் அ.தி.மு.க., வேட்பாளர்

கோவை;கோவையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் ஐந்து அம்சங்கள் கொண்ட 'விஷன் 2030' திட்டம் இருப்பதாக நம்பிக்கை தருகிறார் கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன்.அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...தொழில் நகரான கோவை மென்மேலும் வளர்ச்சி பெற விமான சேவை மிகவும் அவசியம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோரை அழைத்து பேசி ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு தொகையை அதிகரித்து கொடுத்து, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை பெரும்பாலும் முடித்தோம்.அதன்பிறகு, தி.மு.க., மூன்றாண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. நான் வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அளித்து அப்பணியை முடிப்பேன்.கோவைக்கு கடந்த, ஆண்டுகளில் இருந்த தி.மு.க., கூட்டணியான, கம்யூ., எம்.பி.,யும் எதுவும் செய்யவில்லை. நிறைய சங்க நிர்வாகிகளை சந்தித்தபோது கோவை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கம், சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.நான் மனப்பூர்வமாக எம்.பி., பணியை செய்து கோவையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வேன். 'ஜாப் ஆர்டர்' எடுத்து செய்பவர்களுக்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை, 5 சதவீதமாக குறைத்தே ஆக வேண்டும்.'விஷன் 2030' என்ற தொலைநோக்குடன் திறன் மேம்பாடு, 'ஐ.டி., ஹப்', 'ஸ்டார்ட் அப்', பாரம்பரிய தொழிலை காப்பது, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் என, ஐந்து கட்டங்களாக பிரித்து கோவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் தொழில்துறையினரின் கோரிக்கைகளை அமைச்சர்கள் வாயிலாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இன்று அதுபோன்ற அணுகுமுறைகள் தி.மு.க., அரசிடம் கிடையாது. நான் கோவையில் எம்.பி., அலுவலகம் நிறுவுவேன். கோவை மக்களின் தேவைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் தருவேன்.​இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை