உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

வ.உ.சி., பூங்கா மான்கள் வனத்துக்குள் விடுவிப்பு

கோவை;கோவை, வ.உ.சி., வன உயிரில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த, கடமான்களில் மேலும் 5 மான்கள் நேற்று வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.வ.உ.சி., பூங்காவுக்கு, உயிரியல் பூங்கா அந்தஸ்து, மத்திய அரசால் மறுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிக்கப்பட்டு வந்த வன உயிரினங்கள் வனத்துறையினரால், உரிய பராமரிப்புக்குப் பின் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்படுகின்றன. முன்னதாக, 11 கடமான்கள் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன.நேற்று மேலும் 5 கடமான்கள், காச நோய் உள்ளிட்ட தொற்றுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின், போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. இந்த மான்கள், தீவனம், நீர் உட்கொள்வது, அவற்றின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை