| ADDED : ஜூலை 19, 2024 11:42 PM
பாலக்காடு:தமிழகத்தில் உள்ள, ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் மூலத்தறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், மூலத்தறை அணை மதகுகள் படிப்படியாக திறக்க வேண்டிய சூழ்நிலையில், சித்தூர் ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்துார் ஆறு செயற்பொறியாளர் ஷாஜஹான் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'இன்று, (நேற்று) மதியம் 12:00 மணிக்கு, 832 கனஅடி தண்ணீர் மணக்கடவுக்கு வந்தது. எனவே, மூலத்தறை அணையின் மதகுகள் படிப்படியாக திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், சித்தூர் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பாலக்காடு மாவட்டத்தில், சித்தூர் ஆற்றின் கரையோரங்களில், குடியிருப்பவர்களும், தரைப்பாலம் வாயிலாக பயணிப்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.