உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சிக்கனம் வாகன பிரசாரம்

குடிநீர் சிக்கனம் வாகன பிரசாரம்

சூலூர்:கோடை கால வெப்பத்தால், பில்லூர் அணையில் தண்ணீர் மிகவும் குறைந்து விட்டது. இதனால், குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், மக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. தேவையான அளவு குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இந்நிலையில்,வரும் ஒரு வாரத்துக்கு எந்த பகுதியிலும் குடிநீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் சிக்கனம் குறித்து வாகன பிரசாரத்தை துவங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை