| ADDED : ஜூன் 27, 2024 09:52 PM
மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துார் ஊராட்சி தலைவர் கமலவேணி, விவசாய சங்கத்தினருடன் வந்து, திருப்பூர் கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:திண்டுக்கல் மாவட்டம், மிடாப்பாடியை சேர்ந்த அ.தி.மு.க.,வினர், எவ்வித அனுமதியும் பெறாமல், மடத்துக்குளம் தாலுகா, கடத்துார் கிராமத்தில், அமராவதி ஆற்றுப்படுகையில் கிணறு வெட்டியுள்ளனர்.ஊராட்சி நிர்வாகம் என்கிற பெயரில், முறையான அரசு அனுமதி பெறாமல், கிணறு வெட்டி, பைப்லைன் அமைத்து, திண்டுக்கல்லில் உள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் திருடுகின்றனர். அமராவதி ஆற்றிலும் இதுபோல் தண்ணீர் திருடுவதால், மடத்துக்குளம் ஒன்றியத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் குடிநீராதாரம் பாதிக்கிறது. கடத்துார் பகுதி விவசாயிகள், பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.பூமிக்கு அடியில் மின் ஒயர் புதைக்கப்பட்டுள்ளதால், மின்கசிவு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் மற்றும் ஆற்றுநீரில் மின்சாரம் பாய்ந்து, உயிர்ச்சேதம் ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.கலெக்டர் நேரடி யாக விசாரணை செய்து, தண்ணீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.-நமது நிருபர் -