உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலுக்குள் செல்லமாட்டோம்: மக்கள் முடிவு

கோவிலுக்குள் செல்லமாட்டோம்: மக்கள் முடிவு

கோவை : திருமலைநாயக்கன்பாளையத்திலுள்ள கரிவரதராஜபெருமாள் கோவிலில் உண்டியலை திருடியவர்களை கைது செய்யும் வரை, கோவிலுக்குள் செல்வதில்லை என மக்கள் முடிவு செய்துள்ளனர். திருமலைநாயக்கன்பாளையத்தில், 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. பெரியநாயக்கன்பாளையம், காரமடை, செல்வபுரம் உள்ளிட்ட, 14க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் இங்கு வழிபட வருவர். இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, தனி உண்டியல் ஒன்று கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது. கடந்த மார்கழி மாதம் தேர் திருவிழாவின்போது உண்டியலை திறக்க கோவில் அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி உண்டியல் திருட்டு போனது. இது குறித்து பெரியநாயக்கன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த, 13ம் தேதி கோவில் முன் மக்கள் கூட்டம் நடத்தினர். இதில் உண்டியலை உடைத்து ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகளை திருடியவர்களை கைது செய்யும் வரை மக்கள் யாரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருவர் கூறுகையில், மூன்றாண்டுகளாக உண்டியலில், தங்க நகைகள், ரொக்கம் மக்களால் காணிக்கையாக போடப்பட்டுள்ளது. போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து குறிப்பிட்டும் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் மக்கள் கோவிலுக்குள் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை