உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில்  பக்தர்களுக்கு வரவேற்பு 

மாசாணியம்மன் கோவிலில்  பக்தர்களுக்கு வரவேற்பு 

ஆனைமலை: ஆன்மிக பயணமாக வந்தவர்களுக்கு, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வரவேற்பு அளிக்கப்பட்டது.ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், 'ஆடியில் ஆன்மிக பயணம்' என்ற தலைப்பில், அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதில், மூன்றாவது வாரமான நேற்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு ஆன்மிக பயணமாக அழைத்து வரப்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், கோவை ஹிந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்களை வரவேற்று, அம்மன் தரிசனம் செய்ய வைத்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை