உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுந்தராபுரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வெல்டர் கைது

சுந்தராபுரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வெல்டர் கைது

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து மாச்சம்பாளையம், வாரன்ட் ஆபீசர் வீதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிட்டி மார்க், 36, மேலும் சிலருடன் தங்கி, தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இரு நாட்களுக்கு முன், அப்பகுதியில் சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கினார். பின் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவரை, போதையிலிருந்த ஒரு நபர் பின்தொடர்ந்தார்.வீட்டின் அருகே சென்றபோது அந்நபர், நிட்டி மார்க்கின் தலைமுடியை இழுத்து, வாயை பொத்த முயன்றார். இதில் நிட்டிமார்க் கேட் மீது விழுந்ததில் காயமடைந்தார். அவரது அலறலை கேட்டு, அருகேயிருந்தோர் ஓடி வந்து அந்நபரை பிடித்து 'கவனித்தனர்'. சுந்தராபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் மாச்சம்பாளையம், ரவுண்டு ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் மகன் வெல்டர் அனீஸ்குமார், 28 என தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ