| ADDED : ஏப் 03, 2024 01:30 AM
சூலூர்;சூலூர் தொகுதியில், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 803 வாக்காளர்கள் உள்ளனர். 128 இடங்களில், 329 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், வாக்காளர்களுக்கான பூத் சிலிப்புகள் சூலூர் தாலுகா அலுவலகம் வந்துள்ளன. அவற்றை சரிபார்த்து பிரித்து, வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.பூத் சிலிப்புகளை பெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலர்கள், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணியையும் ஒரு புறம் துவக்கி உள்ளனர்.வாக்காளர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள பூத் சிலிப்புகளை வழங்க வேண்டும். வேறு தனி நபரிடம் மொத்தமாக வழங்க கூடாது என, வாக்கு சாவடி அலுவலர்களுக்கு, சூலூர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.