உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாடு கல்விச்சுற்றுலாவுக்கு தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் யார், யார்? 

வெளிநாடு கல்விச்சுற்றுலாவுக்கு தேர்வான அரசுப்பள்ளி மாணவர்கள் யார், யார்? 

கோவை:தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றங்களின் மூலம், ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களில், மாவட்ட அளவில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதன் அடிப்படையில், கோவை சேரன் மாநகர் அரசு பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 10ம் வகுப்பு மாணவி சிவப்பிரியா இலக்கிய மன்றம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கவிதை போட்டியிலும், மாணவர் ராஜதுரை சிறார் திரைப்பட மன்றம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் தனிநபர் நடிப்பு போட்டியிலும், வெற்றி பெற்றனர்.இருவரும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், வெளிநாடு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டதில், கோவை சேரன் மாநகர் அரசு பள்ளியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாணவர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ