உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே பொருட்களுக்கு மாறுபட்ட விலை பணம் இழக்கும் நுகர்வோர்  வேதனை கவனம் செலுத்துவார்களா அதிகாரிகள்

ஒரே பொருட்களுக்கு மாறுபட்ட விலை பணம் இழக்கும் நுகர்வோர்  வேதனை கவனம் செலுத்துவார்களா அதிகாரிகள்

பொள்ளாச்சி:வணிக நிறுவனங்களில், மளிகை பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் செயல்படுகிறது. இங்குள்ள சில கடைகளில், லாப நோக்குடன் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.நிர்ணயித்த விலையைவிட, மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தால், மக்கள் செய்வதறியாது திணறுகின்றனர். ஒவ்வொரு பொருளின் விலையும், கடைகளுக்கு ஏற்ப மாறுபட்டு காணப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், மளிகை, ஆட்டோமொபைல் என, எந்தவொரு கடையிலும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் கிடையாது.மக்கள் கூறியதாவது:பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை பட்டியல் இட்டு, பெரிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில், மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அதற்கான பணத்தை, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்துகின்றனர்.எவரும், பொருட்களின் எடை மற்றும் விலையை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள், பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கின்றனர். ஒரே பொருளின் விலை, கடைக்கு ஏற்றாற்போல் மாறுபட்டுள்ளது.இதனால், அதிகப்படியான கடைகளுக்கு சென்று திரும்புவதை தவிர்த்து, கடைக்காரர்கள் நிர்ணயிக்கும் விலையை நுகர்வோர் அளிக்கின்றனர். எனவே, வணிக நிறுவனங்களில், மளிகை பொருட்கள், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். இதன் காரணமாக, வியாபாரிகளும் மக்களும் பயனடைவர்.மேலும், உணவு பொருட்கள், மளிகை பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் இடத்தில், சில கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விடுகின்றனர். இதனால், எப்போது பார்சல் செய்யப்பட்டது, காலாவதி தேதி குறித்த விபரம் நுகர்வோருக்கு தெரிவதில்லை. இதிலும், அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை