உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி பஸ் மோதி தொழிலாளி பலி

பள்ளி பஸ் மோதி தொழிலாளி பலி

ஆனைமலை;கேரளா மாநிலம், கோவிந்தாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரகாஷ்,40, அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில், ஆனைமலை அருகே மீன்கரை ரோட்டில் சென்றனர். பைக்கை, மகேந்திரன் ஓட்ட, பிரகாஷ் பின்னால் அமர்ந்து சென்றார்.சக்தி சோயாஸ் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, அதிவேகமாகவும், அஜாக்கிரதையகவும் பள்ளி பஸ்சை ஓட்டி வந்த, வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த டிரைவர் மருதாச்சலம்,55, என்பவர், பஸ்சை வலது பக்கம் திருப்பிய போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.படுகாயமடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை