| ADDED : ஜூலை 15, 2024 02:43 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தின கருத்தரங்கம் நடந்தது.உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தின கருத்தரங்கம், பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடந்தது. அதில், தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர்.ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில், என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், உலகளவில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.பின்னர், இந்திய மருத்துவ சங்க மாநில கிளை தலைவர் அபுல்ஹசன் கூறுகையில், ''தமிழகத்தில், இன்னுயிர் காப்போம் திட்டத்தில், 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்; 5,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது. இதில், இந்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுடைய உதவி முக்கியமானது.அவ்வகையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ஒட்டுறுப்பு அறுவை சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்,'' என்றார்.