உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் யோகாசனம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் யோகாசனம்

சூலுார்;சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவ அலுவலர் அருள்ஜோதி தலைமையில் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகள் யோகாசனம் செய்தனர். சூலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.சோமனூர் யூரோ கிட்ஸ் பள்ளியில் நடந்த பயிற்சியில், குழந்தைகள் யோகாசனம் செய்தனர். பயிற்சியாளர் தர்மலிங்கம் பயிற்சி அளித்தார். கிட்டாம்பாளையம் ஊராட்சி அலுவலகம் மற்றும் அம்ரித் சரோவர் குட்டையில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஊராட்சி தலைவர் சந்திரசேகர், உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் செல்வராஜ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் யோகாசன பயிற்சி நடந்தது. வக்கீல் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை