உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகா ஒலிம்பியாட் போட்டி மாணவர்கள் தேர்வு

யோகா ஒலிம்பியாட் போட்டி மாணவர்கள் தேர்வு

கோவை,;அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, வட்டார அளவிலான யோகா போட்டி நடந்தது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டி, கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள, மண்டல கல்வியியல் நிறுவனத்தில் வரும், 18ம் தேதி முதல் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான மாணவர்கள் தேர்வு, வட்டாரம், மாவட்டம், மாநிலம் என மூன்று கட்டங்களாக நடக்கிறது. வட்டார அளவிலான போட்டிகள் நேற்று கோவையில் நடத்தப்பட்டன. 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட, வட்டார அளவிலான போட்டியில் 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10ம் வகுப்பு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், முதல் நான்கு இடங்களை பிடித்த, மாணவ - மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டி, சலீவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளியில் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை