| ADDED : ஜூலை 15, 2024 10:43 PM
மேட்டுப்பாளையம்:காரமடை மேம்பாலத்தில் தனியார் பஸ், பைக் மீது மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி குருத்துகுழி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 28, இவர் காரமடை வசித்து கொண்டு, மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை காரமடையில் இருந்து மத்தம்பாளையத்திற்கு தனது பைக்கில், காரமடை மேம்பாலம் கடந்து செல்லும்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியார் பஸ், பைக் மீது அசுர வேகத்தில் மோதியதில், மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க, சம்பவ இடத்திலேயே பலியானார். காரமடை போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.கடந்த 12ம் தேதி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, காரமடை அருகே வந்த போது, தனியார் திருமண மண்டபம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த, முட்டை லாரி மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் இருந்து, அங்கிருந்த மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக் கொண்டிருந்த ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன், 52, சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்கூட்டரில் இருந்த புங்கம்பாளையத்தை சேர்ந்த பூபால், 29, படுகாயம் அடைந்தார்.இச்சம்பவத்தின் பரபரப்பே அடங்காத நிலையில், மேலும் தனியார் பஸ் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம், காரமடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.--