உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறிச்சியில் 10ம் ஆண்டு தைப்பூச விழா

குறிச்சியில் 10ம் ஆண்டு தைப்பூச விழா

போத்தனூர்:குறிச்சி பசும்பொன் காவடி குழு சார்பில், 10ம் ஆண்டு தைப்பூச விழா நடந்தது.முருகா நகரிலுள்ள பாதாள கண்டியம்மன் கோவிலில் தைப்பூசம் முன்னிட்டு, குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவிலிலிருந்து பால்குடத்துடன், உற்சவர் பாலமுருகன் வீதி உலா நடந்தது. பாலமுருகனுக்கு பால் அபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தன.நேற்று பொள்ளாச்சி சாலையிலுள்ள, தேவர் சமூக மாரியம்மன் கோவிலில் காலை அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ச்சியாக வேல், காவடிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தன. அய்யனார் ஆதினம் ஹரிஹர சீனிவாச சுவாமிகள் அருளாசி வழங்கினார். திரளானோர் அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை