உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்

 காசிவிஸ்வநாதருக்கு 308 சங்காபிேஷகம்

வால்பாறை: சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, 308 சங்காபிேஷகம் நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாத சோமவார சங்காபிேஷகம் நேற்று மாலை நடந்தது.பூஜையில், மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, 5:00 மணிக்கு கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது. பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சங்காபிேஷக பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை