உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!

ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!

கோவை:கோவையில் ரேஷன்கடைகளில் பி.ஓ.எஸ்., (பாய்ன்ட் ஆப். சேல்ஸ்) கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த கருவி 2ஜி நெட் ஒர்க்கில் செயல்படுவதால் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு வேலை செய்வதில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த பழைய கருவியை மாற்றி, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய கருவி வழங்க வேண்டும் என, ரேஷன்கடை ஊழியர்கள், அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பழைய மெஷின்கள் மாற்றப்பட்டு வருகின்றன.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:பழைய பி.ஓ.எஸ்., கருவியை மாற்றி, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய பி.ஓ.எஸ்., கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பேரூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, ஒரு பகுதிக்கு 15 கருவிகள் வீதம், 75 பி.ஓ. எஸ்., புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதில் கைரேகை மட்டுமல்ல, கருவிழி பதிவும் செய்ய முடியும். கைரேகை பதிவாகாத கார்டுதாரர்களுக்கு, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கலாம்.விரைவில் கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இந்த புதிய பி.ஓ. எஸ்., வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை