உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காற்று இல்லாவிட்டாலும் நிமிர்ந்து பறக்கும் கொடி

காற்று இல்லாவிட்டாலும் நிமிர்ந்து பறக்கும் கொடி

கோவை;உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்.ஜி., எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில், காற்று இல்லாமலேயே தேசியக்கொடி நிமிர்ந்து பறக்க புதிய கண்டுபிடிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில், பிளோயர்கள் வாயிலாக கொடியை உயர்த்தும் இயந்திர அமைப்பு, காற்றின் திசை மற்றும் வேகத்துடன் மின்விசிறி தொகுதிகளை சீரமைப்பதற்கான ஒரு சுழல் பொறிமுறை மற்றும் தொகுதிகள் வழியாக கொடியை சீராக உயர்த்தவும், குறைக்கவும் அனுமதிக்கும் கயிறு வழிகாட்டி அமைப்பு ஆகியவை உள்ளது.எல்.ஜி.,ன் 'திரங்கா திட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பு வாயிலாக காற்று குறைவாக இருக்கும் நிலையிலும், இந்திய தேசியக் கொடி நிமிர்ந்து, கம்பீரமாக பறக்கும். எல்.ஜி., லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், ''சிக்கலான சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் எல்.ஜி., உறுதியாக உள்ளது. ''தொழில்நுட்பம் தான் எங்கள் பொறியியல் தயாரிப்புகளுக்கு அடித்தளமாக உள்ளது. கம்ப்ரஸ்ட் ஏர் சிஸ்டம்களில் எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி தேசியக் கொடியின் பெருமைக்கு எங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி