உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்துஸ்தான் பள்ளி

செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்துஸ்தான் பள்ளி

கடந்த 2015ம் ஆண்டு, நவ., மாதம் துவங்கப்பட்ட இந்துஸ்தான் இன்டர்நேசனல் பள்ளி, தற்சமயம் கிரேடு எட்டு வரை செயல்பட்டு வருகிறது.நவஇந்தியா, இந்துஸ்தான் கார்டன் பகுதியில் சர்வதேச தரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. ஐ.ஜி.சி.எஸ்.இ.,போர்டில் செயல்படும் இப்பள்ளியில், கேம்பிரிட்ஜ் பாட திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. திறமை வாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்றுத்தருகின்றனர்.இப்பள்ளியின், பிளே ஸ்கூல் அட்மிசன், 1.6 வயது முதல் துவங்குகிறது. முற்றிலும் செய்முறை தொடர்பான கற்றல், கற்பித்தலே இங்கு செயல்படுத்தப்படுகிறது.மாணவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.இசை,கலை, விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள ஏதுவாக லிசனிங் அறை உள்ளது.அறிவியல், கணிதம் மற்றும் புவியியல் ஆய்வகங்கள் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் கால்பந்தாட்ட அரங்கு மைதானமும் அமைந்துள்ளது.தேர்வுகள், மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தும் வகையிலும், மதிப்பீடு கிரேடு சிஸ்டமாகவும் உள்ளது. கோ கிரீன் ஆக்டிவிட்டி, விழிப்புணர்வு ரேலி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் செய்யும் செயல் திட்டங்கள் அனைவரின் பார்வைக்காகவும் காட்சி படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்