உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பத்தில் விளம்பரம் கூடாது

மின்கம்பத்தில் விளம்பரம் கூடாது

கோவை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி அறிக்கை:மின்வாரியத்துக்கு சொந்தமாக உள்ள, மின்கம்பங்களில் சில நிறுவனங்கள், தனி நபர்கள் தன்னிச்சையாக விளம்பர பலகைகளையும், வயர்களையும் கட்டுவதால், மின்வாரிய பணியாளர்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்களில் பிணைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளையும், வயர்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்