| ADDED : நவ 27, 2025 04:58 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில், 269 ஓட்டுச் சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த, 4ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி பொதுமக்களி டம் பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெறப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில், 90 சதவீதம் நிறைவு செய்த ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் ஐந்து பேரை, மாவட்ட கலெக்டர் பவன்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இப்பணிகளை விரைந்து முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.