உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரவான் தங்க முகத்தில் ஆஞ்சநேயருடன் வீதியுலா படம் : அருண்

 அரவான் தங்க முகத்தில் ஆஞ்சநேயருடன் வீதியுலா படம் : அருண்

போத்தனூர்: கோவை, குறிச்சி அரவான் திருவிழா கடந்த, 16ல் எல்லை கட்டுதல், அரவான் சுவாமிக்கு உயிர் பிடித்தலுடன் துவங்கியது. தொடர்ந்து, 22 வரை பூ கம்பம் சுற்றி விளையாடுதல், சிறப்பு பூஜை நடந்தன. 23ல் குறிச்சி வேதவல்லி அமிர்தவல்லி சமேத வெங்கட்ரமணர கோவிலில் ஆஞ்சநேயர் அரவான் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. தொடர்ந்து குறிச்சி குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி பூஜைகள் நடந்தன. இரவு அரவான் கோவிலில் அரவான் - பொங்கியம்மன் திருக்கல்யாண உற்சவம் திரளான மக்கள் பங்கேற்க நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் அரவான் கோவிலில் விழா துவங்கியதன் அடையாளமாக ஆஞ்சநேயர் அனைத்து சமுதாயத்திலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றார். இரவு குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் ஆஞ்சநேயர், அரவான் சுவாமிகளுக்கு சீர்முறை வழிபாடு, குலாளர் சமூக பூஜை நடந்தன. இதையடுத்து தங்க முகத்துடன் அரவான், ஆஞ்சநேயருடன் வீதியுலா வந்து, அரவான் கோவிலை வந்தடைந்தனர். பின் மந்தவெளி மைதானத்தில் முதுப்பார் சமூக பூஜை நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை, 7:00 மணிக்கு சீர்முறை வழிபாடுடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை