உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடிக்கு உதவி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சேவாலயம் சார்பில், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி சேவாலயம் அமைப்பு சார்பில், சூளேஸ்வரன்பட்டி கிருஷ்ணசாமி பிள்ளை காலனி அங்கன்வாடி மையத்துக்கு, சத்து மாவுகளை பாதுகாப்பாக வைக்க தகரப்பெட்டி வழங்கப்பட்டது.கண்ணப்பன் நகர் அங்கன்வாடி மையத்துக்கு, பாய், விளையாட்டு பொருட்கள், வாட்டர் பில்டர், நாற்காலி, எடை பார்க்கும் மிஷின் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.சேவலாயம் தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார்.உறுப்பினர்கள் முஸ்தபா, அப்துல் ஹமீது, சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ