உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுதானிய உணவு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

சிறுதானிய உணவு குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, இறுதியாண்டு மாணவியர், ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ், ஆழியாறு பகுதியில் தங்கியுள்ளனர். இம்மாணவியர், நேரடியாக விவசாயிகளை சந்தித்து, தோட்டக்கலை சார்ந்த பயிற்சி அளித்தும் வருகின்றனர்.இந்நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி தென்சங்கபாளையம் சமத்துவபுரம் பகுதியில், கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, உடல் நலத்தை காக்க சிறு தானிய உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். சிறுதானிய உணவுகளில், உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, துத்தநாகம், அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், சர்க்கரை நோய், துாக்கமின்மை, உடல் பருமன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறுதானிய உணவுகள் உதவுகின்றன, என, விளக்கி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை