உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாகுபலி எக்ஸ்போ கோவையில் துவக்கம் 

பாகுபலி எக்ஸ்போ கோவையில் துவக்கம் 

கோவை:கோவை கொடிசியா அருகே, வெளி மைதானத்தில் 'பாகுபலி எக்ஸ்போ 2024' நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மாண்டமான பாகுபலி அரங்கு அமைக்கப்பட்டு, தர்பார் மண்டபம், சிம்மாசனம், பாகுபலி அம்பு சுழல் மேடை, செல்பி பூங்கா, அனிமல் பார்க் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி, ஆட்டோமொபைல் , ஸ்கூட்டர், ரியல் எஸ்டேட், 3d பிரிண்ட் ஆகிய அரங்குகளும், ஜெயன்ட் வீல் டிராகன் ரைடு, 3டி சினிமா, பேய் வீடு, ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும், ஷாப்பிங் மற்றும் உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆக., 26 வரை தினமும் மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை, இக்கண்காட்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ