உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்

பாரதியார் தின கால்பந்து மாணவர்கள் அபாரம்

கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மாணவர்கள் அபாரமாக விளையாடினர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், 19வது வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 'பாரதியார் தின' கால்பந்து போட்டி, கோவையில் நடக்கிறது.நேற்று நடந்த நாக் அவுட் சுற்றுப்போட்டியில், கோவை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியையும், கன்னியாகுமரி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும், செங்கல்பட்டு அணி, 3 - 1 என்ற கோல் கணக்கில் தென்காசி அணியையும், நீலகிரி அணி 7 - 6 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில் தேனியையும், திருவள்ளூர் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் திருப்பத்துார் அணியையும், திருச்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியையும், நீலகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் தருமபுரி அணியையும், சென்னை அணி 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில், திருவண்ணாமலை அணியையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை