உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டத்து காளியம்மன் கோவிலில் 3ல் பூக்குண்டம் இறங்கி வழிபாடு

குண்டத்து காளியம்மன் கோவிலில் 3ல் பூக்குண்டம் இறங்கி வழிபாடு

ஆனைமலை:ஆனைமலை அருகே, பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 9ம் தேதி கம்பம் நடுதல், ஊர் பூ வாங்குதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வரும், 29ம் தேதி மாலை, 4:00 மணிக்கு விநாயகருக்கு பொங்கல் வழிபாடு, மார்ச் 1ம் தேதி இரவு, 9:30 மணிக்கு கங்கையில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 2ம் தேதி காலை, 6:30 மணிக்கு குண்டம் திறப்பு, காலை, 8:30 மணிக்கு தேர்நிலையில் இருந்து விநாயகர் கோவில் முன் தேர் நிறுத்தப்படுகிறது.அதன்பின், பொன்னாலம்மன் மலைக்கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு கங்கையில் இருந்து பூவோடு கொண்டு வருதல், இரவு, 8:30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி குண்டம் வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 3ம் தேதி காலை, 4:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், காலை, 7:30 மணிக்கு கங்கையில் இருந்து சக்தி கும்பம் கொண்டு வருதல், காலை, 8:30 மணிக்கு பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்பின், தேரோட்டம் துவங்கி, விநாயகர் கோவிலில் முதல் நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது. காலை, 10:30 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. வரும், 5ம் தேதி மாலை மஞ்சள் நீராடல், மாலையில் கம்பம் இறங்குதல், இரவு அபிேஷக பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி