உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

பள்ளியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 220 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கலை நிகழ்ச்சி மற்றும் ஆண்டு விழா நடத்த, போதிய அளவு வசதி இல்லாமல் வகுப்பு அறைகளில் நடந்தி வந்தனர்.பள்ளி நிர்வாகத்தினர், இந்த வளாகத்தில் புதிதாக கலையரங்கம் அமைக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடந்தது.எம்.எல்.ஏ., தாமோதரன் துவக்கி வைத்தார். மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை