உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்த தான முகாம் 42 யூனிட் சேகரிப்பு

ரத்த தான முகாம் 42 யூனிட் சேகரிப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நடந்த, ரத்த தான முகாமில், 42 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது.ரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்து டாக்டர் மாரிமுத்து விளக்கினார். தொடர்ந்து நடந்த முகாமில், மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். மொத்தம், 42 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை