உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டட உறுதி அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்

கட்டட உறுதி அடிக்கடி பரிசோதிப்பது அவசியம்

பெரும்பாலானோருக்கு புதிய வீடு வாங்கும் போது, அதன் மீது இருக்கும் ஆர்வம் எதிர் வரும் நாட்களில் இருப்பதில்லை. இதனால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.கட்டடங்களில், மின்சார இணைப்புகள் விஷயத்தில், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொது சோதனை தேவை. இதன்படி, ஒயரிங் இணைப்புகளில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா, சுவிட்ச்கள், பிளக் பாயின்டுகளில் உடைப்புகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.ஒயரிங் தொடர்பான இடங்களில், ஏதாவது குறைபாடு தெரியவந்தால் அதை உடனடியாக சரி செய்வது அவசியம். சரியாக செயல்படாத சுவிட்ச்கள், காலாவதியான பல்புகளை அப்புறப்படுத்த வேண்டும். அதே போன்று, பிளம்பிங் வழித்தடங்கள், இணைப்புகள், குழாய் திறப்புகள், வால்வுகள் போன்றவற்றை சரி பார்ப்பது அவசியம். இதில் கசிவுகள் தெரியவந்தால், உடனடியாக சரிசெய்வது அவசியம். கட்டட பராமரிப்பு விஷயத்தில், சமரசம் இன்றி செயல்பட்டால் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை