| ADDED : பிப் 22, 2024 05:47 AM
கோவை: மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டியில், ஏ.ஜே.கே., கல்லுாரி அணி, மூன்று கோல் வித்தியாசத்தில், அசத்தல் வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின், 'சி' டிவிஷன் லீக் போட்டி, நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம், மாலை நடந்த போட்டியில், ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி மற்றும் சின்மயா ஐ.ஆர்.எஸ்., பள்ளி கால்பந்து கிளப் அணிகள் மோதின. போட்டியில் துவங்கி 10வது நிமிடத்தில், ஏ.ஜே.கே., அணியின் பாலு ஒரு கோல் அடிக்க, தொடர்ந்து 25 மற்றும் 55வது நிமிடங்களில், ஜகன் இரு கோல்கள் அடித்தார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில், ஏ.ஜே.கே., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு சென்றது.