உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி டிவிஷன் கால்பந்து: நவக்கரை எப்.சி., அபார வெற்றி

சி டிவிஷன் கால்பந்து: நவக்கரை எப்.சி., அபார வெற்றி

கோவை;மாவட்ட அளவிலான சி டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 6 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நவக்கரை எப்.சி., அணி அசத்தியது. கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் லீக் போட்டி நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரயில் நடக்கிறது. முதல் போட்டியில் நவக்கரை எப்.சி., அணி வீரர்கள் அபாரமாக துவக்கினர். ஆட்டம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினர். மேலும், எதிரணியான ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்து கோல் மேல் கோல் அடித்த நவக்கரை எப்.சி., அணி வீரர்கள் ஆட்ட நேர முடிவில், 6 - 0 என்ற புள்ளிக்கணக்கில் ஏ.ஜே.கே., அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டியில் கே.ஆர்.சி., எப்.சி., அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் ராயல் எப்.சி., அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை