உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் போட்டி முன்பதிவுக்கு அழைப்பு

கிரிக்கெட் போட்டி முன்பதிவுக்கு அழைப்பு

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டிகள் நடக்கிறது. ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி உடற்கல்வி துறை மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியன இணைந்து, 5வது முன்னாள் மாணவர் கிரிக்கெட் போட்டி வரும் ஆக., 9 முதல், 15 வரை நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி அணிகள் தங்களின் குழுவை ஆக.,5ம் தேதிக்குள், 98421 17374 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை. இத்தகவலை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை