மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
3 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
3 hour(s) ago
தேசிய நூலக வார விழா
3 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
3 hour(s) ago
கோவை: கலெக்டர் அலுவலகம் அருகேதமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலசங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி.2.0 என்ற புதிய திட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள் கூறியதாவது: தமிழக அரசு வேளாண் துறையில் செயல்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த அரசாணையால் தோட்டக்கலை தொழில்நுட்பம் மட்டும் பயின்று உதவி தோட்டக்கலை அலுவலர்களால் விவசாயிகளுக்கு வேளாண் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் இழப்பு மற்றும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago