உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது கேன்டீன்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது கேன்டீன்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி

வால்பாறை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் நேற்று முதல் கேன்டீன் பயன்பாட்டிற்கு வந்தது.வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 980 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரியில் உள்ளூர் மாணவர்களை தவிர, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்து படிக்கின்றனர்.இந்நிலையில், கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கேன்டீனில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது. இதனால், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயனடைந்தனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக கேன்டீன் பூட்டிக்கிடப்பதால், கல்லுாரி நேரத்தில் மாணவர்கள் உணவுக்காக வெளியிடங்களில் செல்ல வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கல்லுாரியில் பூட்டியே கிடக்கும் கேன்டீனை மீண்டும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் உத்தரவின் பேரில், கல்லுாரியில் பூட்டி கிடந்த கேன்டீன் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !