உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கேரட், பீன்ஸ் விலை குறைந்தது: மெல்ல உயருது காய்கறி வரத்து

 கேரட், பீன்ஸ் விலை குறைந்தது: மெல்ல உயருது காய்கறி வரத்து

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால், மேட்டுப்பாளையம் மொத்த மார்க்கெட்டிற்கு கேரட், பீன்ஸ் வரத்து குறைந்தது. தற்போது மழை இல்லாததால், காய்கறி வரத்து மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. விலையும் குறைந்து வருகிறது. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில், மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் கேரட், பீன்ஸ், பீட்ரூட் வருவது வழக்கம். ஈரோடு மாவட்டம் தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பீன்ஸ், பல்லடத்தில் இருந்து பீட்ரூட், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து முட்டை கோஸ் மற்றும் மலைக்காய்கறி வரும். நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையினால், நேற்று முன் தினம் காய்கறி வரத்து 30 முதல் 40 சதவீதம் குறைந்தது. மழை இல்லாததால் காய்கறி வரத்து நேற்று முதல் மெல்ல உயர்ந்து வருகிறது. மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறியதாவது:- மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில், நேற்று முன் தினம் கேரட், ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. நேற்று ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது.பீன்ஸ் ஒரு கிலோ நேற்று முன் தினம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது. நேற்று ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. நேற்று பீட்ரூட் ஒரு கிலோ, ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. நேற்று முன் தினம் மழையால் அறுவடை பாதித்து, வரத்து 30 முதல் 40 சதவீதம் குறைந்தது. மழை இல்லாததால், நேற்று காய்கறி வரத்து உயர்ந்தது. இதனால் விலை குறைந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை