மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
27-Mar-2025
கோவை : அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மீதான வழக்கு விசாரணை, வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் ஆண்டுகவுடர்,90. இவருக்கு சொந்தமாக, கோவை மாவட்டம், பெ.நா.பாளையம், சாமிசெட்டி பாளையத்திலுள்ள, 7.5 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.ஆர்.அர்ஜூனன் உள்பட, 11 பேர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துவிட்டதாக, 2010 ல் புகார் அளித்தார்.பெ.நா.பாளையம் போலீசார், விசாரித்து இவர்கள் மீது நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, கோவை, ஜே.எம்:5, கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது அர்ஜூனன் உள்பட,9 பேர் கோர்ட்டில் ஆஜராவில்லை. இதனால், ஏப்., 2 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
27-Mar-2025