| ADDED : நவ 21, 2025 06:48 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கிடையேயான, 46ம் ஆண்டு சகோதய கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்கள் நடந்தது. இதில், 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி அணி வெற்றி பெற்று, சகோதய கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் சுழல் கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு சி.எஸ்., அகாடமி பள்ளியும், மூன்றாம் இடத்தை அகரம் பப்ளிக் பள்ளியும், நான்காம் இடத்தை ஸ்ரீ அம்பாள் பப்ளிக் பள்ளியும் பெற்றன. நிறைவு விழாவில், வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம், நிர்வாக இயக்குனர் சிவகுமார், யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹரிணி, துணை முதல்வர் அனிதா தேவி பிரியா ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பூபதி மற்றும் நரேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.