| ADDED : டிச 31, 2025 05:05 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 'லீக்' நுழைவுக்கான 'நாக் அவுட்' போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ராயல் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஓஜி'எஸ் விண்டியா அணியும் மோதின. ராயல் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 25 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 163 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ஆகாஷ் குன்குல்லயா நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஓஜி'எஸ் விண்டியா அணியினர், 23.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 164 ரன் எடுத்தனர். வீரர் ராஜேஷ்குமார், 100 ரன் விளாசினார். தொடர்ந்து, வி.எஸ்.பி., கிரிக்கெட் கிளப் அணியும், கிரிக்கெட் பார் யூ அணியும் விளையாடின. வி.எஸ்.பி., கிரிக்கெட் கிளப் அணியினர், 25 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 96 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் அரவிந்த் மூன்று விக்கெட் வீழ்த்தினார். கிரிக்கெட் பார் யூ அணியினர், 15.3 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 97 ரன் எடுத்தனர். வீரர் சூர்யா, 44 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.