உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடப்பதால், பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக செயல்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சமூகத் தரவு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு விபரங்களையும், சமூக தரவு கணக்கெடுப்பு பணிக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.இதற்காக சமூக தரவு கணக்கெடுப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு பயிற்றுநர் மற்றும் சமூக வள வல்லுனர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், இதுவரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாதவர்கள், தங்களது இருப்பிடங்களுக்கு வரும் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் முழு விபரங்களையும், எவ்வித தயக்கமும் இன்றி தெரிவிக்க வேண்டும். இதன் வாயிலாக, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், அரசால் நடத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து, மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி