| ADDED : ஜன 11, 2024 12:25 AM
கோவை : கிராஸ்கட் ரோட்டில் உள்ள, கோட்டா கோல்டு நிறுவனத்தின் 100வது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் நாள் விழா நடந்தது.கோட்டா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் செந்தில்குமார், கவிதா நிறுவனர்களின், உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப தள்ளுபடி சலுகை திட்டத்தை செந்தில்குமார் தொடங்கி வைத்தார். வரும் 12ம் தேதி வரை இச்சலுகை திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். நுாற்றாண்டை முன்னிட்டு, நிறுவனத்தின் சார்பில், பல்வேறு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வாகிகள் பிரபஞ்சு கோட்டா, செந்தில்குமார் கூறுகையில், 'மரக்கன்றுகள் நடும் திட்டம், மருத்துவ முகாம், பராமரிப்பு இல்லாத சிறு கோவில் ஒன்றை பராமரித்தல், ஏழை குழந்தைகளின் படிப்பு தேவைக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல், பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடும், அவர்களின் குழந்தைகள் கல்விக்கு உதவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.